ஆப்கானில் இந்திய தூதுரகம் மீதான தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்!!

743

Afcan

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹொராட் என்ற நகரில் அமைந்துள்ள இந்திய தூதகரத்தின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவம் காரணமாக அங்கு பணியாற்றிய எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்த சென்ற மூன்று துப்பாக்கிதாரிகள், படையினருடன் இடம்பெற்ற மோதலில் பலியாகினர்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, பயங்கரவாதிகளின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து சர்வதேச சமூகம் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.