இலங்கையின் வெற்றி சரித்திரம் தொடரும் : அத்தபத்து நம்பிக்கை!!

431

Attapttu

இங்கிலாந்துக்கெதிரான T20 போட்டியின் வெற்றி மூலம் இலங்கை அணி மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் இலங்கை வீரர் அத்தபத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்துடன் ஒரு T20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் இங்கிலாந்துக்கெதிரான T20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை காட்டியது. இதில் மலிங்க மற்றும் பெரேரா சிறப்பான ஆட்டத்தைக் காட்டி அணியை வெற்றியடையச் செய்தனர்.

மேலும் இங்கிலாந்து அணி சற்று தளர்ந்த நிலையிலே காணப்படுகிறது. ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 5-0 என்ற நிலையில் வீழ்த்தப்பட்டதற்கு பிறகு அந்த அணியில் தொடர்ந்து பல மாற்றங்கள் நடந்து கொண்டே வருகின்றன.

பயிற்சியாளர் முதல் புதிய வீரர்கள் வரை இங்கிலாந்து அணி மாறிக்கொண்டே உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் T20 போட்டியின் வெற்றி குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் அத்தபத்து கூறுகையில், இங்கிலாந்துக்கு பயணம் செய்து அந்த அணியை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தியது அற்புதமானது.

மேலும் நமது சிறந்த திறமையைக் காட்ட இந்த வெற்றி கண்டிப்பாக தேவையான ஒன்றாகும். இந்த வெற்றியை தொடர்ந்து மீதமுள்ள டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறியுள்ளார்.