செத்துப் போனதாக நினைக்கப்பட்ட பிரபல நடிகை.. வாழ்க்கையில் பட்ட துயரம்!!

477

நடிகை சுமதி..

தமிழ் சினிமாவில் கொமடி நடிகையாக வலம் வரும் நடிகை சுமதி தனது வாழ்வில் ஏற்பட்ட துயரத்தினை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ரோஷமாகவும், சில தருணங்களில் கொமடி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்துபவர் தான் நடிகை சுமதி.

இவர் சின்னத்திரை மட்டுமின்றி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் வடிவேலுவுடன் சுமதி இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவை.

இந்நிலையில் பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்க்கையின் சோகத்தினை பகிர்ந்துள்ளார். நடிகை சுமதி தனிப்பட்டா வாழ்வில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தாலும் தற்போது இந்த இடத்தில் வந்து நிற்பதாக கூறியுள்ளார்.

இவருக்கு திருமணம் நடைபெற்ற பின்பு கணவர் சந்தேகப்படுவதும், வேலைக்கு செல்லக்கூடாது என்றும் கூறி தொந்தரவு செய்துள்ளார். கணவரிடமிருந்து பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றும், இவரை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

தனது பிள்ளைகளை 10 ஆண்டுகளாக பிரிந்துள்ளதாக கண்கலங்கியபடி கூறியுள்ளார். தற்போது உறவினர்கள், பிள்ளைகள் என அனைவரும் தன்னிடம் பேசிக்கொள்கின்றனர் என்றும், தான் வீட்டை விட்டு வரும் தனது அப்பா இருந்தார் எனவும், திரும்பி போகும் போது அவர் இல்லை இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் சுமதியின் அப்பா இறப்பதற்கு முன்பு அவரை ரிவி சீரியலில் பார்த்துள்ளார். பின்பு சுமதியின் அம்மாவிடம் நம்ம பொண்ணு சாகவில்லை என்று கூறியுள்ளாராம்.

சுமதியின் குடும்பத்தினர் அனைவரும் அவர் இறந்துவிட்டதாகவே நினைத்துள்ள நிலையில், அவரது தந்தைக்கு மட்டும் தனது மகள் எங்கேயாவது உயிருடன் இருப்பாள் என்று நினைத்து வாழ்ந்ததாக கூறி கண்கலங்கியுள்ளார்.