சம்பாதிக்கும் கனவுடன் வேலைக்குப்போன இளம் பெண்ணுக்கு முதல்நாளே நேர்ந்த பரிதாபம்!!

417

சென்னையில்..

கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் நிகிதா (வயது 19). இவர் சென்னையின் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

ஒரு பக்கம் கல்லூரியில் படித்து வரும் நிகிதாவிற்கு மழலையர் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணி கிடைத்துள்ளது. அப்படி இருக்கையில், முதல் நாளான இன்று காலை பணிக்காக இரும்புலியூர் அருகே செல்போன் பேசியபடி ரெயில்வே தண்டவாளத்தை நிகிதா கடக்க முயன்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

நிகிதா ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சமயத்தில் மற்றொரு அசம்பாவித சம்பவமும் அங்கே அரங்கேறி உள்ளது. அப்போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கே வந்துள்ள சூழலில் நிகிதா மீதும் மோதி உள்ளது.

இதனை நிகிதா சற்றும் எதிர்பாராத சூழலில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி தகவல் கிடைத்த போலீசார், சம்பவ இடம் வந்து இளம்பெண் நிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்த இளம்பெண், சென்னையில் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல, தனக்கு கிடைத்த பார்ட் டைம் வேலையில் முதல் நாள் செல்லும் சமயத்தில் இளம்பெண்ணுக்கு இப்படி நடந்ததும் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.