பதவியேற்பு விழாவிற்கு ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்த மோடி!!

917

Rajani

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த மோடி ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசினார்.

இந்நிலையில் வரும் 26ம் திகதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவிற்கு ரஜினிகாந்திர்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பாஜக அழைப்புவிடுத்துள்ளது என்றும் விழாவில் 3,500 பேர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.