நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற அதிசயம் : பக்தர்கள் பரவசம்!!

2190

நயினாதீவு நாகபூஷணி அம்மன்..

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் இன்று மாசி மக உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை மாசி மக தீர்த்தத்தின் போது,



அம்மன் தீர்த்தமாட வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்துச் சென்ற அதிசய காட்சி இடம்பெற்றது. இந்நிலையில் வானில் வட்டமிட்ட கருடன் அம்மனை தரிசித்துசென்ற காட்சி நயினை அம்பாள் அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதேவேளை மாசிமகமான இன்றைய தினம் கடல், குளம், ஆறு ஆகியவற்றில் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை கலந்திருக்கும் என்பது காலங்காலமாக வரும் நம்பப்பட்டு வரும் ஐதீகம் ஆகும்.