ஒரே பெண்ணை 6 முறை திருமணம் செய்து 6 முறையும் விவாகரத்து செய்த நபர்!!

276

Divorce

ரோமான் நாட்டில் தொழில் அதிபர் ஒருவர் தனது மனைவியை ஆறுமுறை திருமணம் செய்து, ஆறு முறை விவாகரத்தும் செய்துள்ளார். இது உலக சாதனையாக கருதப்படுகிறது.

ரோமான் நாட்டில் வசித்து வருபவர் தொழில் அதிபர் சிலிவு பிரிகோனா (50). போலியா பாதிப்பால் ஒரு காலை இழந்த இவர் தனது 39 வயது மனைவி அட்ரினா பாக்முட்டேனுவை ஆறு முறை திருமணம் செய்துள்ளார்.

அதே நேரம் 5 முறை விவாகரத்தும் செய்துள்ளார். ஒரே பெண்ணை ஆறு முறை திருமணம் செய்து விவாகரத்தும் செய்துள்ளது உலக சாதனை என்று கூறப்படுகிறது.

தற்போது ஆறாவது முறையாக தனது மனைவியை விவாகரத்து செய்துள்ள சிலிவு பிரிகோனா. சில நாட்களில் மீண்டும் தனது மனைவியை ஏழாவது முறையாக திருமணம் செய்வார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிலிவு பிரிகோனா கூறுகையில் என்னுடன் தாம்பத்திய உறவு கொள்ள மறுப்பபதுடன் எனக்கென ஒரு குழந்தை பெற்றுத்தர முன்வராமல் இருந்ததே இத்தனை முறை விவாகரத்து செய்ததற்கு காரணம். எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட போலியோ நோய் தாக்குதலால் தனது ஒரு காலை இழந்த போதிலும், என் மனைவிக்கு ராஜமரியாதை கொடுத்து வந்துள்ளேன்.

என் மனைவி மீது அதிக அளவு அன்பு வைத்துள்ளேன் அதற்காக நான் வாங்கிக் கொடுத்த பரிசுப் பொருட்களே சாட்சி. என்னை பல பெண்கள் விரும்பி திருமணம் செய்ய முன்வருகிறார்கள். ஆனால் எனக்கு அட்ரினா மேல் மட்டுமே காதல் வருகிறது என்றார்.