ஹிட்லர் போல் இருந்ததாகக் கூறி பூனையை அடித்து துவைத்த மர்மநபர்கள்!!

585

Hitlor-Dog Hitlor-Dog1

பிரித்தானியாவில் ஹிட்லர் போல் தோற்றம் உள்ளதாக கூறி பூனை ஒன்று மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் க்லோசெஸ்டர்சையர் நகரில் பெஸ் (7) என்று பெயரிட்ட இந்த பூனையின் மூக்கில் கருப்பு முடி இருப்பதால் நாசி சர்வாதிகாரி ஹிட்லர் போல் காட்சியளிக்கின்றது.

இதனால் கோபம் கொண்ட மர்ம நபர்கள், அந்த பூனையை அடித்து குப்பை தொட்டியில் போட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த பூனையின் இடது கண் நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூனையின் உரிமையாளர் கிரிஸ்டி கூறுகையில், தனது பூனை ஹிட்லர் போல் இருந்தாலும், இதுவரை எந்தவித தவறும் செய்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.