இலங்கையில் ஒரே வாரத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!!

2355


இலங்கையில்..



இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரு வாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், ஒரு தங்கப்பவுணின் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக, விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார்.



39,000 ரூபாவினால் குறைவடைந்தது தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நகைக்கடைகளில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.




அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ளதன் காரணமாக, உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்தது.


கோவிட் தொற்று உலகளவில் ஏற்படுத்திய கடும் பாதிப்பு, மற்றும் உக்ரைன் – ரஷ்யப் போரினால் உலகின் பொருளாதாரம் பெரும் சரிவைக் கண்ட நிலையில், தங்கம் தாறுமாறாக விலை ஏறியதுடன், கடந்தகாலத்தில் நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், 24 கரர்ட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,517 ரூபாவுக்கு விற்பனையானது.