பல்கலைக்கழக மாணவி மர்மமான முறையில் கொலை!!

658

21 வயதான பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவர் எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நியாகம, தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்த இந்த யுவதி கொழும்பு திரும்புவதற்காக இன்று காலை மூன்று மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

கொழும்பு செல்வதற்காக பஸ் தரிப்பிடத்திற்கு சென்றிருந்த போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

கூர்மையான ஆயுதம் ஒன்றினாலேயே இவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவியின் எதிர்கால கணவர் என்று கருதப்படும் இராணுவ சிப்பாயொருவர், இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யுவதியுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

11 12 13