42,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த மம்மூத் கண்காட்சியில்!!

353

Ele

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, யானைகள் போன்ற தோற்றமுடைய மம்மூத் என்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வந்தன.

தற்போது காண முடியாத இந்த வகை மம்மூத் குட்டி ஒன்றின் உடல், கடந்த 2007ம் ஆண்டு சைபீரியாவில் ஒரு மான் மேய்ப்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த உடல், மம்மி பாணியில் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. அது, 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளது.

அக்குட்டி, பிறந்து ஒரு மாதமே இருக்கும். 130 செ.மீ. உயரமும், 50 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதன் வால் பகுதி, மற்ற மிருகங்கள் கடித்ததால் காயமாக உள்ளது. தும்பிக்கையில் மண் ஒட்டி இருப்பதால், அக்குட்டி மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அந்த மம்மூத் குட்டியை நன்கு பதப்படுத்தி, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர்.