வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டி 2023!!

668


அல் இக்பால் மகாவித்தியாலயம்..வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் அமைந்துள்ள அல் இக்பால் மகாவித்தியாலய மைதானத்தில் முதல்வர் ஏ.கே.உபைத் தலைமையில் இவ் விளையாட்டுப் போட்டி இடம்பெற்றிருந்தது.
பாடசாலையின் பான்ட் அணியினரின் அணிவகுப்பு மரியாதையுடன் அதிதிகள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து அணிவகுப்பு மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.


இரண்டு வருடங்களுக்கு பின்னர் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்ட்டிருந்தன.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் நீண்ட காலத்திற்கு பின்னர் மஞ்சள் நிறத்தையுடைய ஹிலால் இல்லம் முதலாம் இடத்தையும், நீல நிறத்தையுடைய தாரீக் இல்லம் இரண்டாம் இடத்தையும், சிவப்பு நிறத்தையுடைய சிராஜ் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன்,


இல்லங்களுக்கான வெற்றி கேடயங்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர மற்றும் விருந்தினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர், உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர், வலய மட்ட பிரதிநிகிகள், அயல் பாடசாலை அதிபர்கள்,

ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.