பெண் கொடுக்காததால் ஆத்திரம்.. இளம்பெண்ணை கொன்று துண்டு துண்டாக்கிய கொடூரன்!!

300

காஷ்மீரில்..

பெண் கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், இளம்பெண்ணை கடத்தி கொடூரமாக கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி பல்வேறு பகுதிகளில் தூக்கி எறிந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது புட்காம் (Budgam) என்ற இடம். இங்கு சோய்பக் பகுதி என்ற பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் கடந்த 7-ம் தேதி அந்த பெண் வழக்கம்போல் கோச்சிங் சென்டர் போயுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது சகோதரி அதிகமான இடங்களில் தீவிரமாக தேடியுள்ளார்.

இருப்பினும் அவர் காணவில்லை என்பதால் பதறிப்போன சகோதரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடியுள்ளனர். தொடர்ந்து அவரது நண்பர், உடன் படித்தவர்கள் என அனைவரையும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பெண்ணுக்கு தெரிந்த தச்சு வேலை செய்யும் ஷபீர் அகமது வானி (45) என்ற நபரிடம் விசாரித்தனர். அவரது பதில் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த பெண்ணின் போன் கால்களை ஆய்வு செய்தபோது, ஷபீர் கடைசியாக பேசியது தெரியவந்தது. அதன்பேரில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணை கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் அவரை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக அதிர்ச்சி தகவலை கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ஷபீருக்கு ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என எண்ணியுள்ளார். எனவே அவர் இந்த பெண்ணை பார்த்து பிடித்து போகவே, உடனே அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார்.

ஆனால் பெண்ணின் குடும்பத்தாரோ இவருக்கு பெண் தர முடியாது என்று சில காரணங்களை கூறி மறுத்துள்ளனர். இதனால் கோபத்தில் இருந்த ஷபீர், தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணி அவரை கொலை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று அந்த பெண்ணை சந்தித்துள்ளார். பின்னர் அவரை கடத்தி தான் கொண்டு வந்த கூர்மையான ஆயுதத்தால் அவரை கொலை செய்துள்ளார். மேலும் சடலத்தை மறைக்க அவரது உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக வெட்டி ஓம்பூரா என்ற இடத்தில் பல்வேறு பகுதிகளில் தூக்கி வீசியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள் ஷபீரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தூக்கி வீசி எறிய பட்ட பெண்ணின் உடல் பாகங்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெண் கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், இளம்பெண்ணை கடத்தி கொடூரமாக கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி பல்வேறு பகுதிகளில் தூக்கி எறிந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.