
வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு செல்லும் இலங்கைப் பெண்கள் கர்ப்பம் தரித்த நிலையில் நாடு திரும்புவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக சென்ற 300க்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பமடைந்த நிலையில் கடந்த வருடம் நாடு திரும்பியதாக பணியகத்தின் பிரதி முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பல இலங்கை பெண்களின் தவறான நடத்தைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக பணிப்புரியும் இலங்கை பெண்களுக்கு வீட்டு எஜமான்களினாலும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.





