வவுனியாவில் தந்தையற்ற இரு இளைஞர்களின் வைத்திய செலவுக்கு உதவிய கனடாவாழ் புலம் பெயர் தமிழர்!!(படங்கள்)

306

தாலிக்குளம் பூவரசன்குளத்தைசேர்ந்த ராகவன் 2013.12.23 திகதி அன்று தவறுதாலாக எரியும் உமியில் விழுந்து இடுப்புக்கு கீழ் பொசுங்கிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார் .

இவரின் நிலை கருதி கனடா வாழ் தமிழர் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கம் ஊடாக ஒரு தொகை பணமும் .ஒரு மாதத்துக்கு தேவையான உலர் உணவு பொருட்களும் நேற்று (24.05) வழங்கி வைக்க பட்டன .

இவருக்கு ஏற்கனவே புலம் பெயர் வாழ் சோபியா நாதன் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் ஊடாகவும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், புளொட் உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் (மோகன் ) ஆகியோர் உதவியமை குறிப்பிடத்தக்கது .

மேலும் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பு கனகராயன்குளம் பெரியகுளத்தில் புலம் பெயர் வாழ் ரஞ்சித்குமார் மூலம் மிக வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்க சென்ற போது 2009 யுத்தத்தில் உடலில் செல் துண்டு சென்ற நிலையில் இன்று வரை அகற்றபடாது வலியால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டு இருந்த தந்தையை இழந்த சுரேஷ் குமார் என்ற இளைஞனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்து இருந்தது.

அந்த இளைஞனுக்கும் புலம் பெயர் வாழ் தமிழரொருவரால் வழங்கபட்ட ஒரு தொகை பணமும், ஒரு மாதத்துக்கான உலர் உணவுப் பொருட்களும் நோயாளர் நலன்புரி சங்கத்தால் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் அந்த இளைஞனுக்கு சுவாசப்பையில் செல் துண்டு இருப்பதால் கொழும்பில் சத்திரசிகிச்சை செய்ய முடியும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது .

இந்த நிகழ்வில் நோயாளர் நலன்புரி சங்கத்தின் செயலாளர் தேசமான்ய சிவஞானம், பொருளாளர் தமிழ் மணி அகளங்கன், தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன்) மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6