ஒரே ஒரு பேப்பரில் 135 கோவில்களை வரைந்து சாதனை படைத்த மாணவி… குவியும் வாழ்த்துக்கள்!!

406


கல்லூரி மாணவி..ஒரே ஒரு ஏ4 பேப்பரில் 135 தமிழக கோவில்களை வரைந்து சாதனைப் படைத்த மாணவிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பென்சில், ரப்பர் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தாமல் ஒரே ஒரு ஏ4 பேப்பரில் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 135 முக்கிய கோவில்களின் தோற்றத்தைப் படம் வரைந்து சாதனைப் படைத்திருக்கிறார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து, மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.