இலங்கையில் களவாடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கையடக்க தொலைபேசிகள்!!

578

இலங்கையில்..

இலங்கையில் கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் 8422 கையடக்க தொலைபேசிகள் களவாடப்பட்டுள்ளன. இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

காணாமல் போகும் தொலைபேசிகளை கண்டறியும் நோக்கில் 2018ஆம் ஆண்டு முதல் பொலிஸார் விசேட திட்டமொன்றை அறிமுகம் செய்திருந்தனர்.

இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரையில் ஆணைக்குழுவிற்கு தொலைபேசி காணாமல்போன சம்பவங்கள் தொடர்பில் 134,451 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 28,000 தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.