வவுனியாவில் 5105 ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை!!

386

Vav-paddy

வவுனியா மாவட்டத்தில் சுமார் 5105 ஏக்கரில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களத்தின் நெற்செய்கை பாடவிதான உத்தியோகத்தர் ஆர்.தர்மதேவன் தெரிவித்தார்.

பெரும்போக நெற் செய்கை நிறைவடைந்ததன் பின்னர் ஏற்பட்ட மழை வீழ்ச்சியினால் குளங்களில் உள்ள நீர் மட்டத்திற்கு ஏற்பட ஒவ்வொரு போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட குளங்களில் உள்ள வயல்கள் விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,

கனகராயன்குளத்தில் 75 ஏக்கரிலும், உலுக்குளம் போதனாசிரியர் பிரிவில் பாவக்குளத்திற்கு கீழ் 350 ஏக்கரிலும், சிறிய நீர்ப்பாசன குளத்தின் மூலம் 50 ஏக்கரிலும், மடுக்கந்தை குளத்தின் கீழ் 1000 ஏக்கரிலும், கோவில்குளம் போதனாசிரியர் பிரிவுக்குட்பட்டு 850 ஏக்கரிலும், ஓமந்தை பிரிவில் சுமார் 450 ஏக்கரிலும் பம்பைமடு பிரிவில் சுமார் 1000 ஏக்கரிலும் வெங்கல செட்டிகுளம் பிரிவில் 1350 ஏக்கரிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை நெடுங்கேணி குளங்களில் நீர் போதுமானதாக இன்மையால் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.