மடகஸ்காரில் உயிரிழந்த இலங்கை நபர் : மேலும் இருவருக்கு நேர்ந்த சோகம்!!

726

மடகஸ்காரில்..

மடகஸ்காரில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பலியானதோடு இன்னும் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் பேருவளையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் முஹம்மது ரிலா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த இருவரும் தற்போது அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மடகஸ்கார் நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.