கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அடுத்துள்ள என்.தட்டக்கல்லை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (35). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோவைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் சந்தியா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கந்தன் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்ததால் அடிக்கடி அவர் வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளியே செல்வது வழக்கம்.

இது ஒரு புறம் இருக்க நேற்று கந்தன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் ஒன்று இரவு நேரத்தில் திடீரென கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது கந்தன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மயங்கி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை தூக்கிக் கொண்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நாகரசம்பட்டி காவல் துறையினர் கந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை துவங்கினர். முதற்கட்ட விசாரணையாக கந்தனின் மனைவி சந்தியாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போதுதான் காவல் துறையினருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது. ஏனெனில் மனைவி சந்தியா அவரது கள்ளக்காதலன் சிவசக்தியுடன் சேர்ந்து கணவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதனை அறிந்ததும் காவல் துறையினர் உடனடியாக சந்தியா மற்றும் சிவசக்தி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், காதலித்து திருமணம் செய்து கொண்ட கந்தன் மற்றும் சந்தியா தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் கந்தன் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விடுவார். அப்போது சந்தியா வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் அவரது வீட்டிற்கு சிவசக்தி (23) பால் பாக்கெட் வாங்கி கொடுப்பது போல வீட்டிற்குள் நுழைந்து சந்தியாவுடன் பழகி வந்துள்ளார்.

அவர்களது இந்த பழக்கம் நாலடிவில் தவறான பழக்கமாக மாறி அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கந்தனுக்கு இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து தெரிய வந்ததும் மனைவியை அவர் கண்டித்துள்ளார்.

ஆனாலும் அவர்களின் அந்தத் தொடர்பு தொடர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கந்தல் வெளியூருக்கு சரக்கு ஆட்டோவை எடுத்துக்கொண்டு செல்வதாக இருந்தது.

அதனை தன் மனைவியிடம் கூறிவிட்டு கந்தன் வெளியே சென்றுள்ளார். அந்த சமயம் பார்த்து சந்தியாவும் சிவ சக்தியும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர். ஆனால் வெளியே சென்ற கந்தன் திடீரென இரவு 10 மணியளவில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு சந்தியா மற்றும் சிவசக்தி தனிமையில் இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்த கந்தன் இருவரையும் சரமாரியாக அடித்து கண்டித்துள்ளார். அப்போது சந்தியா வீட்டில் இருந்த மிளகாய் பொடியை கந்தன் முகத்தில் வீசியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழவே அவரை சந்தியா மற்றும் சிவசக்தி இருவரும் சேர்ந்து வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துள்ளனர்.

கொலை செய்தது மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தினர் வந்ததும் மர்ம நபர்கள் கணவனை குத்திட்டு சென்றதாக கூறி சந்தியா நாடகமாடியதும் தெரிய வந்தது. கணவனை மனைவி மற்றும் கள்ளக்காதலன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





