தனக்கு திருமணம் நடப்பதை மறந்து தூங்கிய மணப்பெண் : தட்டி எழுப்பும் மணமகன்.. இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!!

607

திருமணம்..

திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்வின் அடுத்த அத்தியாயம் தான். இந்த திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும். பெண்ணோ மாப்பிள்ளையோ பார்த்து இரு வீட்டாரிடம் சம்மதம் கேட்டு அவர்களுக்கு நிச்சயம் செய்து இறுதியில் திருமணம் கூட்டி செல்வதே பெரும் பாடு.

இவ்வாறு பெரும்பாடுபட்டு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தால் மணவறையில் வந்து மணப்பெண் தூங்கினால் எப்படி இருக்கும். இவ்வாறு மணப்பெண் தூங்கும் வீடியோ காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த காணொளியில் திருமண மண்டபத்தில் மணமகனும் மணமகளும் அமர்ந்து சடங்கு சம்பிரதாயங்களை செய்து வருகின்றனர். இவ்வாறு பண்டிதரும் மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்போது திருமண அசதியில் கன்னத்தில் கை வைத்தவாறு மணப்பெண் தூங்க ஆரம்பித்திருக்கிறார்.

இதனைப் பார்த்த பண்டிதர் மணமகனிடம் சொல்லி மணமகளை எழுப்பச் சொல்லியிருக்கிறார். அவரும் மெதுவாக சைகை காட்டி எழுப்பி இருக்கிறார்.

பிறகு மணப்பெண் கண்ணை விழித்து பார்த்ததும் சுற்றி சுற்றி பார்த்து விட்டு சிரித்திருக்கிறார். தனக்கு திருமணம் நடப்பதைக் கூட மறந்து விட்டு மணவறையில் தூங்கிய காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது.