வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த திருநாதன் பிரியந்தன் இயக்கிய பாடலுக்கு வழங்கப்பட்ட நோர்வே தமிழ் படைப்பாளிகளுக்கான விருது!!

629

Priyanthan

நோர்வேயில் கடந்த 27.04.2014 அன்று இடம்பெற்ற தமிழ் படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வில் வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த திருநாதன் பிரியந்தன் இயக்கிய “தேன் சிந்தும் பூக்கள்” எனும் காட்சிப்பாடலுக்கு சிறந்த வீடியோ பாடலுக்கான விருது கிடைத்துள்ளது.

இந்தப் பாடல் கவிமாறன் சிவா மற்றும் மிதுனாவின் நடிப்பிலும் ராஜேசின் இசைஅமைப்பில் மோகன் ராஜுவின் தயாரிப்பில் பிரியந்தனின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி இணையத்தளத்தில் ஏராளமான ரசிகர்கள் பார்வையிட்டிருந்தனர். இப் பாடலினை கோவில்குளம் இளைஞர் கழகம் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.