பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

684


பொல்பித்திகமவில்..பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் பொல்பித்திகம பேருந்து நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.அத்தோடு துஷ்பிரயோகம் செய்தவர்கள் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொல்பித்திகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கணனி வகுப்பில் கலந்து கொண்ட பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் இந்த யுவதி காத்திருந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் குறித்த யுவதியை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் தன்னுடன் வருமாறும் அழைப்பு விடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரவு வெகுநேரமாகியும் பேருந்து வராத காரணத்தினால் குறித்த யுவதி மோட்டார் சைக்கிளில் ஏறிய போது குறித்த நபர் யுவதியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அவரிடமிருந்து தப்பிக்க முற்பட்ட போது, ​​குறித்த நபர் யுவதியை தாக்கி வன்கொடுமை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யுவதியின் அலறல் சத்தம் காரணமாக அக்கம்பக்கத்தினர் வந்து அந்த நபரை பிடித்து அடித்து, பொல்பித்திகம காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அவர் முதலில் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொல்பித்திகம காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.