வவுனியா சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா-2022

1080

 

வவுனியா இறம்பைக்குளம் சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா மற்றும் 2023இல் பாடசாலை  செல்லவுள்ள  மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வு என்பன கடந்த 04.03.2023 சனிக்கிழமை  பள்ளியின்  நிர்வாக இயக்குனர் S.நந்தசீலன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி  நிகழ்வில்  வவுனியா மாவட்ட மேலதிக அரசஅதிபர்  திரு.தி.திரேஸ்குமார் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து  கொண்டார். கௌரவ விருந்தினராக திருமதி.எம்.திருமகள் (உளநல மருத்துவ அதிகாரி-பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வவுனியா)அவர்கள் கலந்து கொண்டதுடன் திரு.கு.செந்தில்குமரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர்-உடற்கல்வி) வலயக்கல்வி அலுவலகம் வவுனியா தெற்கு) T.இராஜேஸ்வரன் (ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் முன்பள்ளி,வவுனியா வடக்கு வலயம்),திரு.ஸ்ரீதரன் (ஓய்வுபெற்ற அதிபர்- செட்டிகுளம் மகா வித்தியாலயம்),திருமதி.சுமித்திரா(பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் -வவுனியா),பவித்திரா (கிராமசேவையாளர் இறம்பைக்குளம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

மேலும்  விசேட அழைப்பின் பேரில்  திருமதி.கே.செல்வராணி (முன்பள்ளி இணைப்பாளர் – வவுனியா நகரம்-02)லயன் R.பாலரூபன் (முகாமையாளர் அலியான்ஸ் இன்சூரன்ஸ் யாழ்ப்பாணம்),T.துஷ்யந்தன் (உளவள ஆலோசகர் யாழ்ப்பாணம்) R.சதீசன் (விற்பனை மேம்பாட்டு உத்தியோகத்தர் -கிரவுன் லிமிடெட்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வின்போது 2023 இல் பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.