கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.. கண்ணீர் விட்டழுத காட்சி!!

2615

இலங்கையில்..

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த தம்பதியினர் இலங்கை சுற்றுலா வழிகாட்டியின் மீது கொண்ட அன்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு குடும்பத்துடன் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை சுற்றுலா வழிக்காட்டி அவர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது சுற்றுலா வழிகாட்டியை விட்டு பிரிய மனமில்லாத வெளிநாட்டு தம்பதியின் பிள்ளைகள் கண்ணீர் விட்டழுத காட்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது.