இறந்த மனைவிக்கு கோயில் கட்டி தினந்தோறும் வழிபடும் விவசாயி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி!!

602

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஈஸ்வரி. இருவரும் திருமணம் செய்து 35 ஆண்டுகள் பெரியளவில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

சுப்பிரமணி – ஈஸ்வரி தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு சுப்பிரமணியின் மனைவி ஈஸ்வரி திடீரென காலமானார். மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணி மிகுந்த வேதனையடைந்தார்.

அவர் உயிரிழந்த நாளன்று கணவர் சுப்பிரமணி கதறிஅழுததை பார்த்து மக்கள் பெரும் வேதனை அடைந்தனர். மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்த நிலையில், அவர் உயிரிழந்தை சுப்பிரமணியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், அவருக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில் மனைவிக்கு கோவில் கட்ட முடிவுசெயதார். அதன்படி, 15 லட்சம் ரூபாய் செலவில் 6 அடி உயரத்தில் ஈஸ்வரியின் திருவுருவ சிலையை நிறுவி அவருக்கு கோயில் கட்டி வணங்கி வருகிறார். இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்துச் செல்கின்றனர்.

கோயிலில் உள்ள மனைவிக்கு சிலையை விவசாயி சுப்பிரமணி தினமும் வணங்கி வருகிறார். மார்ச் 31ஆம் தேதி மனைவி ஈஸ்வரியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 500 பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அன்னதானம் வழங்க சுப்பிரமணி முடிவு செய்துள்ளார்.