யூசுப்பதானின் அதிரடி சாதனை!!

449

Yusuf

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யூசுப்பதானின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. 22 பந்துகளில் 72 ஓட்டங்களை குவித்தார். இதில் அவர் 50 ஓட்டங்களை 15 பந்தில் எடுத்து புதிய சாதனை படைத்தார்.

ஐ.பி.எல். வரலாற்றில் இவ்வளவு குறைந்த பந்தில் யாரும் அரைச் சதம் எடுத்தது கிடையாது. இதன் மூலம் அவர் கிறிஸ் கெய்ல், கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

2009ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக கில்கிறிஸ்ட் (ஐதராபாத்) 17 பந்துகளிலும், 2012ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ்கெய்ஸ் (பெங்களூர்) 17 பந்துகளிலும் அரை சதம் அடித்து இருந்தனர்.

இதை யூசுப்பதான் முறியடித்து 15 பந்துகளில் அரை சதத்தை தொட்டார். இவர் 7 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.