வவுனியாவில் 44 வயது நபர் அதிரடியாக கைது!!

3808

ஒருவர் கைது..

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (21.03.2023) இரவு 10 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறம்பைக்குளம் பகுதியில் குறித்த நபரை பரிசோதனைக்குட்படுத்திய பொழுதில் அவரின் உடமையில் 10 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றுள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர். சந்தேகநபரை வவுனியா மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுள்துள்ளனர்