ஐஸ்கிறீம் கேட்டு அடம்பிடித்த மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய்க்கு சிறைத்தண்டனை!!

244


Jail

ஐஸ்கீறீம் கேட்டு அழுத மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்த தாய் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



ஐஸகிறீம் கேட்டு அழுது அடம்பிடித்த மகனை களுகங்கையில் வீசி கொலை செய்ய குறித்த பெண் முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு களுத்துறை நீதவான் பத்மன் சூரசேன இரண்டாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.



இந்த தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 2500 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.



சாமிகா திலானிபொன்சேகா என்ற பெண்ணே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். இவர் களுத்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


2008ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் திகதி ஐஸ் கிறீம் கேட்டு அழுத தனது ஆறு வயது மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளார். சட்ட மா அதிபரினால் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நோய் வாய்ப்பட்டிருந்த மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பிய போது களுத்துறை போதிக்கு அருகாமையில் வைத்து ஐஸ்கிறீம் கேட்டு அழுததாகவும், தமது கைகளை கடித்து விட்டதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த தாம் மகனை ஆற்றில் வீசி கொலை செய்ய முயற்சித்ததாகவும், பொலிஸார் மகனைக் காப்பாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன், தற்போது சிறுவர் இல்லமொன்றில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.