தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வை Vlog செய்த YouTuber!!

711

இந்தியாவில்..

இந்தியாவை சேர்ந்த YouTuber ஒருவர் தனது தாத்தாவின் இறுதிச் சடங்கு நிகழ்வை vlog செய்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தற்போதைய காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமாக பலரும் பிரபலமடைவதோடு பணமும் சம்பாதித்து வருகின்றனர்.

அதிக லைக்ஸ்களுக்காக கருத்துகளுக்காக வித்தியாசமாக எதையாவது பதிவிட்டுக் கொண்டும், பல கோமாளித்தனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். அது போலொரு சம்பவத்தை தான் யூடூப்பரான லக்ஷய் சவுத்ரி(Lakshay Chaudhary) என்ற நபர் செய்திருக்கிறார்.

தனது தாத்தாவின் இறப்பிற்கு பின்பான இறுதிச் சடங்கு நிகழ்வு முழுவதையும் நண்பர்களோடு சேர்ந்து vlog செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது தான் துன்பகரமான விஷயமாகும்.

தனது YouTube பக்கத்தில் சுமார் நான்கு லட்சம் சந்தாதாரர்களை கொண்ட லக்ஷய் சவுத்ரி என்ற நபர் தனது YouTube பக்கத்தில் நிறைய வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவராவர்.

இந்த நிலையில் தனது யூடூப் பக்கத்தில் அவரது தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வு முழுவதையும் vlog செய்து அதனை தனது YouTube பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த மார்ச் 8 ஆம் திகதி தனது தாத்தாவின் இறுதிச் சடங்கு நிகழ்வு நடந்தது முழுவதையும் அங்கு அவர்கள் என்ன மாதிரியான சடங்குகளை கடைப்பிடிக்கிறார்கள் என்பது பற்றியும் vlog செய்துள்ளார்.

இந்த வீடியோ ஆரம்பிக்கும் போது லக்ஷய் சவுத்ரி “எனது தாத்தா எந்த வருத்தமும் இல்லாமல் நீண்ட நாள் வாழ்ந்தார்” என கூறியுள்ளார். மேலும் தனது நண்பர்களோடு மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டு இந்த வீடியோவை எடுத்துள்ளார்.