வவுனியா செட்டிகுளம் பீடியா பாமில் தந்தையை இழந்த 35 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சுவிஸ் வாழ் தமிழர்!!(படங்கள்)

345

செட்டிகுளம் பீடியா பாமில் தந்தையை இழந்த 35 பிள்ளைகளுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் வசிக்கும் வவுனியாவை சேர்ந்த நாகராசா (மணியம் நாகா) அனுசரணையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ), மாணிக்கம் ஜெகன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தயான், பீடியா பாம் முன்பள்ளி ஆசிரியை திலகவதி, ஞானபிள்ளையார் கோவில் பொருளாளர் செந்தூரன், சனசமுக நிலைய செயலாளர் கண்ணா, மகளிர் அபிவிருத்தி சங்க தலைவி நாகேஸ்வரி உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தயான் வரலாற்றில் எம் இனத்தின் பக்கங்கள் என்னும் எழுத படாமல் உள்ளது. மாணவர்களே நீங்கள் கற்று தேர்ந்து அப்பக்கங்களை எழுதவேண்டும் எனவும், அதற்க்கு மென்மேலும் புலம் பெயர் உறவுகள் உதவ வேண்டும் என்றும், இன்று இந்த பிள்ளைகளுக்கு உதவிய நாகராசாவுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்

சந்திரகுமார் (கண்ணன் ) தனதுரையில் திட்ட மிட்டு நசுக்க படும் எம் இனத்தின் கல்வி நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிகையில் புலம் பெயர் உறவுகளின் பங்கு அளப்பரியது என்றும் அந்த வகையில் உதவிய எமது உறவு நாகராசாவுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

மாணிக்கம் ஜெகன் தனதுரையில் புலம் பெயர் உறவுகள் செய்யும் இந்த உதவிக்கு நீங்கள் செய்யும் கைமாறு நீங்கள் நன்றாக கற்று நல்ல பிரஜைகளாக வந்து இது போன்று மற்றவர்களுக்கு உதவுவதே என்றார்.

பின்னர் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன. இறுதியில் முன்பள்ளி ஆசிரியை திலகவதி தனது நன்றி உரையில் மின்சாரம் கூட இல்லாத எமது கிராமத்திலே பலபேரிடம் நாம் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி கேட்டு இருந்தோம். தருவதாக சொல்வார்கள் பின்னர் ஏதும் நடக்காது, நாமும் விடாது முயற்சித்து கொண்டு இருந்த வேளையில் தயான் மூலம் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்து 6 நாட்களில் எமக்கு இந்த உதவி கிடைத்தது மகிழ்ச்சி எனவும், இன்று இந்த பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கும், புன்னகைக்கும் காரணமாக இருந்த புலம் பெயர் உறவு நாகராசாவுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

1 2 3 4 5 6 7 8 9 10