கணவரை ஆள் வைத்து தாக்கிய துணை நடிகை.. உதவியாக இருந்த ஆண் நண்பர்!!

772

துணை நடிகை..

நடிக்க அனுமதி வழங்க மறுத்த கணவரை, நண்பரின் உதவியோடு ஆள் வைத்து அடித்துள்ள துணை நடிகையை காவல்துறை கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42).

தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரம்யா (36) என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த சூழலில் ரமேஷ் அடிக்கடி ராம்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததால் கணவரை விட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்துள்ளது.

எனவே அவர் இதற்காக வாய்ப்பு தேடி அழைத்துள்ளார். அப்போது கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் சந்திரசேகர் என்பவரது உதவியை கேட்டுள்ளார்.

பின்னர் அவரும் ரம்யாவுக்கு வாய்ப்புகள் வாங்கி கொடுத்துள்ளார். அதன்படி சென்னை சென்ற அவர் தற்போது ஒரு சில சீரியல்களில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த சூழலில் ரம்யாவின் தாய் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார் ரம்யா. எனவே மீண்டும் கோவை வந்த ரம்யா அவருடன் வாழ தயாரானார். ஆனால் இனி நீ நடிக்க கூடாது என்று கூறி ரம்யாவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார் அவரது கணவர் ரமேஷ்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ரம்யா இதுகுறித்து தனது நண்பர் டேனியலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது உதவியோடு தனது கணவரை மிரட்ட எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று ரமேஷ், ரம்யா இருவரும் இரு சக்கர வாகனத்தில் ஜமீன்முத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்தனர்.

பின்னர் ரமேஷை மட்டும் கடுமையாக தாக்கினர். அதோடு ரமேஷின் மேல் பிளேடால் கீறலும் போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர் மர்ம கும்பல். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்ட ரமேஷ், இதுகுறித்து காவல்துறையிலும் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரமேஷின் மனைவி ரம்யாதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து ரம்யா, அவரது நண்பர் டேனியல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். நடிக்க அனுமதி வழங்க மறுத்த கணவரை, நண்பரின் உதவியோடு ஆள் வைத்து அடித்துள்ள துணை நடிகையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.