திடீரென காணாமல் போன குழந்தைகள்.. காதலுக்காக தாய் செய்த கொடூரம்!!

455

உத்தர பிரதேசத்தில்..

காதலுக்காக தனது 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து கால்வாயில் தூக்கி வீசிய கொடூர தாயின் செயல் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அருகே கிராமம் ஒன்று உள்ளது. இங்கு நிஷா – சாஹித் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிராப் என்ற 10 வயது மகனும், கைனன் என்ற 6 வயது மகளும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் அங்கிருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலை நேரத்தில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த இரன்டு குழந்தைகளையும் திடீரென காணவில்லை.

இதனால் பதறிப்போன தந்தை குழந்தைகளை அங்கும் இங்கும் தேடினார். ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சாஹித், இதுகுறித்து உள்ளூரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் குழந்தைகள் அந்த பகுதியில் விளையாடியதாக எதுவும் அதில் பதிவாகவில்லை. இதனால் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரித்தனர்.

தொடர்ந்து பெற்றோர்களின் செல்போன்களை வாங்கி பறிமுதல் செய்தனர். அவர்கள் அழைப்புகள் எல்லாவற்றையும் சோதனை செய்தபோது தாய் நிஷாவுக்கு, அந்த ஊர் கவுன்சிலர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதையடுத்து தாயிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்தது.

அதாவது நிஷாவுக்கும், உள்ளூர் கவுன்சிலரான சவுத் பவுஜி என்பவருக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இந்த காதலால் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

மேலும் நிஷா, தான் தனது கணவனை விட்டு வந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் சவுத் பவுஜி, நிஷாவை மட்டும் ஏற்றுக்கொள்வதாகவும், குழந்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி தனது குழந்தைகளை கொலை செய்ய எண்ணியுள்ளார் தாய் நிஷா. அதன்படி சம்பவத்தன்று குழந்தைகளை பக்கத்து வீட்டுக்காரர்கள் 4 பேர் உதவியோடு கடத்தியுள்ளார் நிஷா. முதலில் அவர்களுக்கு மயக்க ஊசி போட்டு, பின்னர் அவர்களது கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ளார்.

மேலும் சடலங்களை மறைப்பதற்காக ஒரு பெட்டியில் வைத்து, காரில் கொண்டு சென்று சிறிது தூரத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் வீசியுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு வந்த நிஷா, வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் காணவில்லை என்று கணவரிடம் தெரிவிக்க அவர் போலீசில் புகார் அளித்தார்.

இவை அனைத்தும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்த தாய் நிஷா, இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த காதலன் சவுத் பவுஜி, பக்கத்து வீட்டக்காரர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காதலனுடன் வாழ்வாதற்காக பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துள்ள தாயில் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு குன்றத்தூரில் உள்ள அபிராமி என்ற பெண், பிரியாணி கடைக்காரரை காதலித்ததால் தனது இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்றதோடு, போலீஸ் வாக்குக்கமூலத்தில் தனக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறியது தமிழ்நாட்டில் அப்போது பெரிய அதிரவலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.