இதயத்துடிப்பே நின்றுவிட்டது : ரோகித் ஷர்மா!!

439

ROhit

ராஜஸ்தான் அணிக்கெதிரான மும்பை அணியின் வெற்றி நம்ப முடியாத ஒன்று என அந்த அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பிளே- ஓப் சுற்றுக்குள் நுழைந்தது.

முதலில் விளையாடிய ராஜஸ்தான் றொயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் குவித்தது. சம்சன் 47 பந்தில் 74 ஓட்டங்களும், கரண் நாயர் 27 பந்தில் 50 ஓட்டங்களும் ஹோட்ஜே 16 பந்தில் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.

190 ஓட்டங்கள் இலக்கை 14.3 ஓவரில் எடுத்து வெற்றி பெற்றால் பிளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை மும்பை அணிக்கு இருந்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி அதிரடியை காட்டத் தொடங்கியது. மும்பை அணியில் விளையாடும் நியூசிலாந்து வீரர் அண்டர்சன் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மும்பை 14.3 ஓவரில் 189 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பந்தில் 4 ஓட்டங்கள் எடுத்தால் பிளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை மும்பைக்கு இருந்தது.

கடைசி நேரத்தில் பால்க்னர் வீசிய பந்தை ஆதித்யா தாரே சிக்சர் அடித்து மும்பையை பிளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற வைத்தார்.

இந்த பரபரப்பான ஆட்டம் பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா கூறுகையில், இந்த வெற்றியை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

எனது இதயத்துடிப்பே நின்று விடும் வகையில் போட்டி இருந்தது. இது போன்ற அதிரடியான ஆட்டம் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து விடாது. இது மும்பை மக்களின் வெற்றியாகும். இந்த வெற்றியை மும்பை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.