வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் திடீர் விஜயம் : பாடசாலையின் தேவைகள் குறித்தும் கவனம்!!

1280

கல்வி ராஜாங்க அமைச்சர்..

கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு இன்று (29.03) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.



கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தேசியப் பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, பாடசாலை மாணவர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் பாடசாலை வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.

தொடர்ந்து பாடசாலையின் தேவைகள் தொடர்பாக அதிபர் ஆ.லோகேஸ்வரன் மற்றும் பிரதி அதிபர்களுடன் கலந்துரையாடியதுடன், அதிபரிடம் இருந்து பாடசாலையின் தேவைகள் பற்றிய மகஜரை பெற்று மாணவர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.