நடிப்பில் அசத்திய நாயிற்கு சர்வதேச விருது!!

263

பிரான்சில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில், ஆண்டு தோறும் சர்வதேச கேன்ஸ் திரைபட விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டில் நடந்த இந்த விழாவில், நாய்கள் தொடர்பான திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டன.

அதில் இந்த ஆண்டுக்கான பாம் டாக் விருது இயக்குநர் கோர்னெல் முண்ட்ருசோ இயக்கிய, பெஹர் இஸ்டென் (வெள்ளை கடவுள்) என்ற படத்தில் நடித்த லேப் ராடர் ரகத்தை சேர்ந்த ’பாடி’ என்னும் நாய்க்கு கிடைத்தது.

இந்த விருதை அறிவித்த போது அந்த நாயிற்கு கழுத்தில் டை அணிவிக்கப்பட்டதுடன், அழகாகவும் அலங்கரிக்கப்பட்டு மேடைக்கு கொண்டு வரப்பட்டது.

நாயின் சார்பில் விருதை படத்தின் இயக்குநர் கோர்னல் முண்ட்ருசோ பெற்றுக் கொள்கையில், அங்கு கூடியிருந்த நாய் அபிமானிகளும், திரைப்பட விமர்சகர்களும் எழுந்து நின்று பலத்த கரவொலியை எழுப்பினர்.

D1 D2