ஒரே மாணவனுக்காக கட்டிப் புரண்டு சண்டையிட்ட 30 மாணவிகள்.. தீட்டித் தீர்த்த பொதுமக்கள்!!

602

திருப்பூரில்..

ஒரே பள்ளியில் படிக்கும் மாணவனை காதலித்து வந்த மாணவி, வேறொரு மாணவி அவனுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி, பேசி வந்ததால், பொது இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, தோழிகளுடன் கட்டிப் புரண்டு சண்டையிட்டது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீரென மாணவிகள் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டது குறித்து என்னமோ ஏதோ என திரண்ட பொதுமக்கள், விஷயம் கேள்விப்பட்டு காரித்துப்பி, திட்டி மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி சாலை அருகே புது ராமகிருஷ்ண புரத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப் பகுதியில், அந்த பள்ளி மாணவிகள் 30க்கும் மேற்பட்ட ஒன்றாக திடீரென திரண்டனர். காட்டுப் பகுதியில் ஒன்றாக திரண்டதுடன், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.

ஒருவரை பார்த்து இன்னொருவர் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் திட்டிக் கொண்டார்கள். இவர்களுக்குள்ளான தடித்த வார்த்தைகள் தகராறாக உருவெடுத்தது. மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். தலை முடியைப் பிடித்துக் கொண்டு கட்டிப் புரண்டு சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டதைப் பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அனைவரும் சென்று அந்த சண்டையைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.

எதற்காக இவர்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்றும் புரியாமல் விழித்தனர். மோதலை தடுத்து நிறுத்த முயன்றும் ஆவேசமாக காணப்பட்ட மாணவிகளை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.

பிறகு, பெரும் முயற்சிக்கு பிறகு அவர்களை அமைதிப்படுத்தினர். சண்டையை நிறுத்திய பொதுமக்கள் மாணவிகளிடம் சண்டைக்கான காரணம் குறித்து விசாரணை செய்துள்ளனர்.

அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் அதே பள்ளியில் பயின்று வரும் ஒரு மாணவனைக் காதலித்து வந்துள்ளார். அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பல்வேறு மெசேஜ்களை அனுப்பி சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அறிந்த அந்த மாணவனின் காதலியான மாணவி எப்படி நீ என் காதலனுடன் சாட்டிங் செய்யலாம் என மற்ற மாணவிகளிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த சிக்கலைப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என இரண்டு மாணவிகளும் தங்களது தோழிகளுடன் பவானி நகர் காட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். இரண்டு தரப்பினரும் பேசும் போது சுமூக முடிவு ஏற்படாமல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிப் போனதால் இருதரப்பு மாணவிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. காரணத்தைக் கேட்டு காரித்து துப்பி, மாணவிகளை அங்கிருந்து விரட்டினார்கள். தலையெழுத்து… தறுதலையாக போகுது அடுத்த தலைமுறை என்று தலையிலடித்தப் படியே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இருதரப்பு மாணவிகளிடமும் பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.