வவுனியாவில் பயந்து ஓடியவரை விரட்டி விரட்டி வெட்டிய திருடர்கள்!!!

1031

knife

திருடர்களை கண்டு அஞ்சியோடியவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வவுனியாவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வவுனியாவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா நயினாமடு கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற உப தபாலதிபர் தம்பிராசா செல்வராசா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரது மனைவியின் தங்க சங்கிலியை அபகரித்துள்ளனர்.

இதன்போது உப தபாலதிபர் பயத்தில் செய்வதறியாது வீட்டை விட்டு வெளியே ஓடிய வேளையில் அவரை துரத்திச் சென்று கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர்.

இதனால், வெட்டுக்காயங்களுக்கான அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.