மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக பட்டதாரி மாணவி.. விசாரணையில் வெளியான தகவல்!!

845


இரத்தினபுரியில்..இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், குறித்த யுவதியின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைகளுக்காக அரசாங்க ரசாயனையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், பிரேத பரிசோதனையில் அவரது மரணம் கழுத்து நெரிக்கப்பட்டமையினால் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.


சடலம் தொடர்பில் வெளிப்படையான தீர்மானம் எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் யுவதியின் கைத்தொலைபேசி காணவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி நிரியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சச்சினி ஜினாதாரி என்ற பெண்ணின் சடலம் கடந்த 27ஆம் திகதி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.


பல்கலைக்கழக படிப்பை முடித்த சசினி, இரத்தினபுரியின் ஹிடெல்லானா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் காலை வேலைக்கு சென்ற யுவதி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து நடத்திய தேடுதலில் அவரது சடலம் கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.