முல்லைத்தீவில் குப்பிவிளக்கில் வாழ்ந்த குடும்பம்.. 6 மாத குழந்தையினை பலிகொடுத்த சோகம்!!

1407

முல்லைத்தீவில்..

குப்பிவிளக்கு வீழுந்து தீப்பற்றியதில் காயமடைந்த 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில்,

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தற்காலிக வீட்டில் வசித்து வரும் இளம் தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சின்னையா சுறோமி என்ற இந்த இளம் தம்பதிகள் எந்தவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தற்காலிக வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 22.02.2023 அன்று வீட்டில் குப்பி விளக்கு தவறி விழுந்ததில் குழந்தையின் உடலில் தீப்பற்றி தர்மபுரம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி கொண்டு சென்று பின்னர்,

யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது. இந்த குழந்தையின் உடல் இன்று (31.03.2023) முல்லைத்தீவு இளங்கோபுரம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.