குழந்தையாகவே வாழும் இளம்பெண் : அவரது வயது என்ன தெரியுமா?

700

நாக்பூரில்..

இந்தியாவின் நாக்பூரில் வாழும் அபோலி (Aboli Jarit)யைப் பார்ப்பவர்கள் அவரை ஒரு சின்னப் பெண் என்றே நினைக்கிறார்கள். காரணம், அவரது உயரம் மூன்று அடி நான்கு அங்குலம் மட்டுமே.

ஆனால், தனக்கு 20 வயதாகிறது என்கிறார் அபோலி. கல்லூரியில் படிக்கிறார் அவர். அபோலியை renal rickets என்னும் அபூர்வ நோய் தாக்கியுள்ளது. அதனால், அவரது எலும்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அவரால் நடக்க முடியாது. மேலும், அவருக்கு சிறுநீரகப்பை கிடையாது. ஆகவே, சிறுநீர் உருவானதுமே அது நேரடியாக வெளியே வந்துவிடும் என்பதால், அபோலி எப்போதுமே டயாப்பர் அணிந்தவண்ணம்தான் இருக்கவேண்டும்.

ஆனால், அபோலியைப் பார்த்தால் அவருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறது என்று சொல்லவே முடியாது. எப்போதுமே புன்னகை பூக்கும் அழகிய முகம் கொண்ட அபோலிக்கு, பாட்டுப் பாடவும், நடிக்கவும் ஆசை.

ஹாலிவுட், பாலிவுட் என எல்லாத் திரைப்படங்களிலும் தலைகாட்டிவிடவேண்டும் என்ற முடிவில் இருக்கும் அபோலி, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்றிருக்கிறார்.

இந்த நோய் வந்தவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதில்லை. ஆனால், அபோலி 20 வயதாகியும் உயிர் வாழ்வது மட்டுமல்ல, தனது பிரச்சினையிலும் ஒரு பாஸிட்டிவ் விடயம் இருப்பதாகக் கூறுகிறார்.

யாராவது எப்போதுமே இளமையுடனே இருக்க முடியுமா, ஆனால், நான் எப்போதுமே இளமையுடன் இருக்கிறேனே, எவ்வளவு நல்ல விடயம், நான் அதிர்ஷ்டசாலி என்கிறார் வாய் நிறைய புன்னைகையுடன் அபோலி.