மேடையில் மணமகளுக்கு நேர்ந்த விபரீதம்… கதறியழுத புது மாப்பிள்ளை!!

3128

மேடையில்..

பாறை மேல ஏறி நின்னு ஒரு செல்ஃபி, அப்படியே வெவ்வால் மாதிரி தலைகீழா ஆலமர விழுதைப் புடிச்சுக்கிட்டு ஒரு செல்ஃபி என திருமணத்திற்கு முன்பான ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் களைகட்டி வருகிறது.

ஜோடியா போட்டோ புடிச்சுக்கோங்க… அதுக்கு ஏன் லட்சக்கணக்குல பணத்தை செலவழிச்சு சூனியத்தை வெச்சுக்கறீங்க? என்று இவர்களைப் பார்த்து கேட்க தோன்றுகிறது.

அந்த பணத்துல நாலு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம். சரி.. அது அவங்கவுங்க தனிப்பட்ட சுதந்திரம், விருப்பம்.. எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

அப்புறமா எதுக்கு இந்த கட்டுரைன்னு கேட்கறீங்களா? இதைப் படிச்சுப் பார்த்துட்டு நாலு பெத்தவங்களோ, இல்லை நாலு திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்களோ திருந்துனாங்கன்னா அவங்க வாழ்க்கை நல்லா இருக்குமே என்கிற அக்கறை தான்.

திருமண நாள் என்பது ஆயுளுக்கும் நினைவில் வைத்துக் கொள்கிற நாள் என்பதில் சந்தேகமே இல்லை. சிலருக்கு சுகமான நினைவுகளாகவும், சிலருக்கு சிறைப்பட்டோமே என்கிற சோகமான நினைவுகளாகவும் ஆயுளுக்கும் தொடரும் பந்தம்.

அதை மகிழ்ச்சியான தருணங்களாக புகைப்படங்களில் சிறைப்பிடிப்பதும் தவறில்லை. ஆனால், ஊர் கூட்டி பந்தா செய்கிறேன் என்று பண்ணுகிற அலம்பல்கள் சமயங்களில் உயிருக்கே உலை வைத்திடும் என்பதனை நிறைய பேர் உணர்வதில்லை.

அப்படியானதொரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது. திருமண ரிசப்ஷன் மேடையில் மணமகனும், மணமகளும் கைகளில் பளபளக்கும் துப்பாக்கியுடன் போட்டோவுக்கும், வீடியோவுக்கும் போஸ் தருகிறார்கள்.

உற்சாகத்தில் துப்பாக்கியால் விளையாடுகிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக மணமகளின் கைகளில் இருந்த துப்பாக்கி, சரியாக அவரது முகத்துக்கு அருகே கொண்டு செல்லும் போது திடீரென வெடித்து சிதறுகிறது.

இந்த விபத்தில், மணமகளின் முகத்தில் பலத்த காயம். வலியில் துடித்த மணமகள் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு மேடையிலிருந்து அலறியடித்து ஓடுகிறாள். ஆசையாய் காதலித்த முகமாச்சே என்கிற கவலையில் மணமகனும் பின்னாலேயே மனைவியைக் காப்பாற்ற ஓடுகிறார். பின்னாலேயே பதற்றத்தில் உறவினர்களும் ஓடிச் சென்று சூழ்ந்து கொள்கின்றனர்.

இந்த விபத்துக்கு பிறகான மணப்பெண்ணின் வாழ்க்கை குறித்த தகவல்கள் இல்லை. இதெல்லாம் தேவையா? என்பதை பெற்றோர்களும், திருமணம் செய்து கொள்பவர்களும் யோசிக்க வேண்டிய நேரம் இது. உஷாரா இருங்க.. பல சமயங்களில் விளையாட்டு விபரீதமாகி உயிரையும் பறிக்கலாம். அப்புறமா வாழ்க்கைப் பூராவும் கலங்கி நிற்காதீங்க.