மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

332

தேனியில்..

இன்றைய இளம் தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் மன அழுத்தம், சோர்வு, விபரீத முடிவுகள் என தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகள் தீர்வல்ல என்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இருந்தாலும் உடனடி முடிவாக தற்கொலைகளை நாட ஆரம்பித்து பெரும் சீரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் முருகன்.

இவருடைய மகள் 25 வயது மகேஸ்வரி. இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அங்கேயே ஒரு விடுதியில் தங்கி படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு விடுதியின் மேல்தளத்தில் மகேஸ்வரி செல்போனில் பேசிக் கொண்டே இருந்ததை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர். கத்தி , கூச்சலிட்டவாறே இரவு 11.30 மணியளவில் திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுந்த சத்தம் கேட்டது. உடனே மற்ற மாணவிகள் ஓடிவந்து பார்த்தனர்.

அங்கே தரையில் ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். சக மாணவிகள் உடனடியாக இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலம் மகேஸ்வரியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேஸ்வரி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? வேறு யாரும் அவரை தள்ளி கொலை செய்தனரா?

அதற்கான காரணங்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி திடீரென மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.