
ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்திற்கு வசிம் அக்ரமின் அறிவுரைகளே காரணம் என்று யூசுப் பதான் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் வீரர் யூசுப் பதான் திடீர் விஸ்பரூபம் எடுக்க 15 பந்தில் அதிவேகமாக அரைசதம் கடந்தார்.
ஐ.பி.எல் வரலாற்றில் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் சென்னை அணியை பின் தள்ளி இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணியை நிலை நிறுத்தினார்.
இது குறித்து யூசுப் பதான் கூறுகையில், தனது இந்தப் துடுப்பாட்டத்திற்கு அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் வசிம் அக்ரம் தான் காரணம். வாசிம் அக்ரம் பெரும் அளவு என்னை ஊக்கமளித்தார்.
மேலும் அவரது அனைத்து அனுபவங்களையும் ஒன்று திரட்டி பந்துவீச்சாளர்கள் மனோநிலை பற்றி எனக்கு வழங்கிய அறிவுரைகள் மிக முக்கியமானவை. அவரது அறிவுரை தான் என்னை இத்தகைய போட்டிக்குத் தயார் செய்தது என்று கூறியுள்ளார்.





