இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக சகோதரனின் மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்த நபர்!!

498

ஜார்கண்ட்டில்..

ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்து தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் சகோதரனின் மனைவி மற்றும் மகளைக் கொன்ற நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



ஜார்கண்ட் மாநிலம் கும்லா நகரில் சொத்து தகராறு மற்றும் காப்பீட்டுத் தொகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அனோஸ் கந்துல்னா(Anos Kandulna) என்ற நபர் தனது சகோதரனின் மனைவி மற்றும் இரண்டு மருமகன்களைக் கொன்றுள்ளார்.

குடிபோதையிலிருந்த அந்த நபர் தனது சகோதரரின் மனைவியான பூனம் கண்டுல்னா (35) என்ற பெண்ணை வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

பூனத்தின் இரண்டு மகன்கள் தாயைக் காப்பாற்ற முயன்றபோது, ​​​​அனோஸ் ஆத்திரத்தில் அவர்களையும் கொன்றுள்ளார். கடந்த 2017ல் கணவரை இழந்த பூனம், லுங்காடு பத்ரா டோலி கிராமத்தில் தனது இரண்டு மகன்களான பவன் மற்றும் அர்பித் ஆகியோருடன் வசித்து வந்தார்.

அவரது மாமியார் மற்றும் அனோஸ் கந்துல்னா அதே கிராமத்தில் அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். பூனம் மற்றும் அவரது இரண்டு மகன்களைக் கொன்ற பிறகு, குற்றவாளி மூன்று சடலங்களையும் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு மாட்டுச் சாணக் குழியில் வீசியுள்ளார்.

ஒரு வாரமாக பூனம் காணாமல் போனதனால் அவரது உறவினரான விஸ்ராம் கண்டுலானா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். விசாரணையில், மாட்டு சாண குழியிலிருந்து இறந்தவர்களின் உடல்களை காவல்துறை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், கிராம பஞ்சாயத்தில் வழக்கை விசாரிக்கப்பட்டுள்ளது, அப்போது குற்றவாளி அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அருகிலிருந்த கிராமத்திலிருந்து அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவர் பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அனோஸை காவல் துறை விசாரணை செய்து வருகிறது.