ஒடிசாவில்..
ஒடிசாவில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, “நோ பால்” சிக்னல் காட்டிய நடுவரை, இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் கட்டக் பகுதியிலுள்ள இளைஞர்களிடையே நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பிரமாபூர், சங்காபூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு அணிகள் விளையாடியுள்ளன.
அப்போது போட்டியில் நடுவராக இருந்த லக்கி ராட்(Lucky Raut) என்பவர் “நோ பால்” சிக்னல் காட்டியதாக கூறப்படுகிறது. அங்கு விளையாடிக்கொண்டிருந்த சுமிருதி ரஞ்சன் ரூட்(Smruti Ranjan Rout) என்ற நபர் நடுவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரஞ்சன் ரூட் கோபத்தில் தன் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து நடுவரைக் குத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் லக்கி ராட்டை அருகிலிருக்கும் சீ.பி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். லக்கி ராட்டை சோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்டாக் காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.