மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சினிமா நட்சத்திரங்கள்!!

609

Modi

பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு, பொலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், கொலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் உட்பட பல்வேறு சினிமா நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில், பொலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், விவேக் ஓபராய், தர்மேந்திரா, அனுபம் கேர், ஹேமமாலினி, சத்ருகன் சின்கா, கிரோன் கேர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். சல்மான் கான் தனது தந்தையும் கதாசிரியருமான சலிம் கானுடன், சோனியா காந்திக்கு பின்வரிசையில் அமர்ந்திருந்தார்.

மோடியின் தீவிர ஆதரவாளரான நடிகர் விவேக் ஓபராய், தனது சட்டையில் தாமரை சின்னத்துடன் விழாவுக்கு வந்திருந்தார். தர்மேந்திரா தனது மனைவி ஹேமமாலியுடன் பங்கேற்றார்.

உடல்நலக்குறைவு காரணமாக லதா மங்கேஸ்வர் விழாவில் பங்கேற்காவிட்டாலும், மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தனது கைப்பட எழுதிய வாழ்த்து கடிதத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

மேலும் விழாவில் பங்கேற்காததற்கு அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இதற்கு மோடி நன்றி தெரிவித்து பதில் அனுப்பியிருக்கிறார்.

இதுதவிர பொலிவுட் இயக்குனர் மதுர் பந்தர்கர், இசை அமைப்பாளர் பாபி லஹிரி, பூனம் தில்லோன், வினோத் கண்ணா, டிவி நடிகரும் பாஜ தலைவருமான ஸ்ருமிதி இராணி, போஜ்புரி பின்னணி பாடகர் மனோஜ் திவாரி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.