வவுனியா செட்டிகுளத்திற்கு மாலை நேர இறுதி பேரூந்தில் பயணிப்பவர்கள் அவலநிலை!!

2225

பயணிகளின் அவலநிலை..

தினமும் மாலை நேர இறுதி பேரூந்தில் வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கி செல்பவர்கள் பேரூந்தில் போதிய இடவசதி இன்மையால் பேரூந்தின் பல பகுதிகளிலும் தொங்கிய படியும் பேரூந்தின் மேல் ஏறியும் உயிருக்கு அச்சுறுத்தலான வகையில் பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.



வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசிப்பவர்கள் தனியார் வேலைவாய்ப்புக்கள், சந்தை நடவடிக்கைகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், அரச வேலை என தினமும் பலரும் வவுனியா நகருக்கு வந்து செல்கிறார்கள்.

இவ்வாறு வந்து செல்பவர்கள் மாலை வேளையில் நகரில் இருந்து செட்டிகுளம் நோக்கி திரும்பும் போது போதிய வாகன வசதி இன்மையால் இறுதி பேரூந்தில் தமது உயிரை கையில் பிடித்தபடி பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.

அதிகளவான பயணிகள் காரணமாக பேரூந்தில் போதிய இடவசதி இன்மையால் பேரூந்தில் தொங்கிய படியும், அதன் பின்பகுதி, மேற்பகுதி என பல பகுதிகளிலும் உயிருக்கு அச்சுறுத்தலான, ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே குறித்த பகுதிக்கு மாலை நேரத்தில் போதியளவிலான பேரூந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளின் கோரிக்கையாகவுள்ளது.