யாழில் மின்சாரம் தாக்கி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

554

யாழில்..

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (06.04.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறித்த மாணவன் மின்னழுத்தியினை மின் பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்டவேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாணவனின் உயிரிழப்பு தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.