கேரளாவில்..
மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்து துடி துடிக்க கொலை செய்திருக்கிற கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலத்தில் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(34) . இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கெட்டரின் பகுதியில் இருக்கும் பொது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இதற்காக தன் கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அதே பகுதியில் தங்கி இருந்து அவர் அந்த வேலையை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கெட்டரிங் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அஞ்சு அசோக், அவரது மகள்கள் ஜீவா(6), ஜானகி(4) கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்பவத்தன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜீவா, ஜானகி இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறிது நேரத்தில்இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். ஏற்கனவே அஞ்சு உயிரிழந்து விட்டதால் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளில் மூன்று பேரும் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது . இதை அடுத்து போலீசார் அஞ்சுவின் கணவர் சஜூவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் மனைவியையும் மகள்களை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதை அடுத்து விசாரணைகள் நடந்து முடிந்து வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து புறனாய்வு காவல் ஆய்வாளர் அதிகாரி, அஞ்சு ஒரு அர்ப்பணிப்பு உள்ள செவிலியர். அன்பான தாய் . அவரை அவரையும் அவரது குழந்தைகளையும் கொன்ற சஜித் நிச்சயம் மனம் வருந்துவார் என்று கூறியிருக்கிறார்.